ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நிலவும் கடும் பனி பொழிவால் விமான போக்குவரத்தும், தரைவழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மொஸ்கோவில் இருந்து புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 1989-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது 40 சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. வீடுகளின் கூரைகளில் படர்ந்துள்ள பனி துகள்களை அகற்றும் பணி நடைபெறுகிறது.
பனிப்பொழிவு அதிகரித்து இருப்பதால் சாலைகளில் தேங்கியுள்ள பனித்துகள்களை அகற்றும் பணியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post