ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் பதவிகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் கட்சியின் தலைவர்களே இவ்வாறு பதவி இழந்துள்ளனர்.
அந்த பதவிகளுக்கு வேறு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவி இழந்துள்ள அமைச்சர்கள்
கம்பஹா மாவட்ட மொட்டு கட்சித் தலைமைப் பதவியிலிருந்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீக்கப்பட்டு அந்த பதவி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தின் மொட்டு கட்சித் தலைமைப் பதவியிலிருந்து எஸ்.எம். சந்திரசேன நீக்கப்பட்டு, அந்த பதவி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து அமைச்சர் கஞ்சன நீக்கப்பட்டு, மாவட்டத்தின் பதில் தலைவராக நிபுண ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதிக்கு ஆதரவு
காலி மாவட்டத்தின் மொட்டு கட்சித் தலைமைப் பதவியிலிருந்து அமைச்சர் ரமேஸ் பத்திரண நீக்கப்பட்டு, அந்த பதவி நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த காரணத்தினால் இவ்வாறு குறித்த அமைச்சர்கள் பதவிகளை இழந்துள்ளனர்.மேலும் பல மாவட்டங்களில் ஜனாதிபதிக்கு ஆதரவான தலைவர்கள் நீக்கப்பட்டு, கட்சியின் வேறும் உறுப்பினர்கள் அந்த பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post