ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.இதற்கான முதற்கட்ட பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டது.உன்னிப்பாக ஆய்வு செய்த பிறகே முடிவுஇதன்படி, இவர்கள் கட்சி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பதவிகளில் இருந்தும் நீக்கப்படவுள்ளனர்.;சம்பந்தப்பட்ட எம்.பி.க்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக ஆய்வு செய்த பிறகே இந்த முடிவு எட்டப்பட உள்ளது.
ரணிலுக்கு ஆதரவுஇதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுவின் எம்.பிக்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படையாகவும் மறைமுகவாகவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post