ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகியவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைவர் இல்லாததால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், வெற்றிக்கு தேவையான வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள்
எண்ணப்படும்போது யார் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை அறிய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post