முன்னாள் ஜனாதிபதிகளான, மைத்திரியும், கோட்டாபயவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பணம்
வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அதிபரானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது பின்னர்
கோட்டாபய ராஜபக்ச அதிபரானதும் அது மேலும் குறைக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
யுத்தத்தின் இறுதித் தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ்மக்கள் மற்றும், விடுதலைப்புலிகள் இயக்க
உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது.
முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு
குறைத்தார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம்
வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் சார்பில்தான், பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும்
வழங்கப்பட்டது.” என்றார்.
மேலும், அவர் இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர
அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post