மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகள் இன்று (08) காலை
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இவை வந்தடைந்துள்ளன.
சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு
காணப்படும் தடுப்பூசி கேள்வி மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி
செலுத்தும் நடவடிக்கை ஆரம்பித்துள்ள நிலையிலும், இலங்கைக்கு 4 மில்லியன்
தடுப்பூசி வழங்குதவதாக உறுதியளித்தமைக்கான கடப்பாட்டின் அடிப்படையில் இரு
கட்டங்களாக இவ்வாறு தடுப்பூசிகளை வழங்குவதாக, இலங்கையிலுள்ள சீனத்
தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post