நாட்டில் முக்கிய நிர்மாணத்துறை பங்குதாரர்களுடனான சந்திப்பின் பின்னர் தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் சீமெந்து இறக்குமதி செய்வது தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நிறுவனங்களுடன் இலங்கை கலந்துரையாடி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் ரூபாயின் பெறுமதி 20 வீதம் அதிகரித்திருந்த போதிலும் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கெட் ஒன்றின் விலை கடந்த மாதம் 150 ரூபா அல்லது 5.4 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
சீமெந்தின் விலை உயர்வானது கட்டுமானத் தொழிலை பாதித்துள்ளது மற்றும் சுமார் 100,000 கட்டுமான தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளளனர்.
நாங்கள் பங்குதாரர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியபோது சில நிறுவனங்களிடம் இருந்து வாங்கினால் சீமெந்தின் விலையை குறைக்கலாம் என்று கூறினார்கள். எனவே இப்போது குறைந்த விலையில் அதைக் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளோம்.
எனவே மேற்கண்ட நடவடிக்கையினால் சீமெந்தின் விலையினை 400-500 ரூபாய் வரை குறைக்க முடியும்” எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Discussion about this post