தமிழக அரசின் நிவாரணப் பொதியின் இரண்டாம் கட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தொகையை விட ஆயிரத்து 800 அரிசிப் பொதிகள் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன் ஊடாக மேலும் 9 ஆயிரம் குடும்பங்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
தமிழக அரசின் நிவாரணப் பொதியின் இரண்டாம் கட்டத்தில் 45 ஆயிரம் குடும்பங்களுக்குரிய அரிசி நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்படும் என்று உணவு ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு மேலதிகமாக 50 கிலோ அரிசியைக் கொண்ட கொண்ட ஆயிரத்து 800 பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலதிகமாக 9 ஆயிரம் குடும்பங்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
Discussion about this post