மக்களின் உரிமைகள், தேவைகள் என்பன எல்லா விதத்திலும் நிராகரிக்கபடுகின்றன
தற்போதய சூழலில் மக்கள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு
இருக்கப்போவதில்லை.
மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது. அதற்காக மூன்று
ஆண்டுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே வெகு விரைவில்
அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின்
பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
இவர் நாட்டின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான
நோக்கங்கள் குறித்து கருத்தை வெளிப்படுத்தும்
போதே இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் உணவு , எரிபொருள் , அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் என எதுவுமே
இல்லாது போகும் வேளையில், எல்லாவ்ற்றையும் பெற்றுக்கொள்ள மக்கள்
வரிசையில் நிற்கும் நிலை உருவாகும் சந்தர்பத்தில் மக்கள் மேலும்
மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது. எனவே வெகு விரைவில்
அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள். எனக் கூறியுள்ளர்.
Discussion about this post