அரசியல் தீர்வு மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள்
தொடர்பில் தங்களுடன் உரையாடுவதற்கு, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை
என, வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்
மேற்கொள்ளப்படும் போராட்டப் பந்தலில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே,
அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்துரைத்த அவர்கள், தாங்கள் எந்தவோர் இலங்கை நிறுவனங்களையும்
நம்பவில்லை எனவும்மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிசால் பேச்லெட் அவர்களை
மத்தியஸ்தராக்க விரும்புகிறோம் எனவும் கூறினர்.
‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தங்கள் சலுகையை ஏற்க ஒப்புக்கொண்டால்,
அவர்களின் கோரிக்கையை தாங்கள் பரிசீலிக்கலாமெனத் தெரிவித்த அவர்,
இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் திருமதி அம்பிகா
சற்குணநாதன், யு.என்.எச்.ஆர்.சியும் மற்றும் தமிழ் புலம்பெயர் தமிழர்கள்
பலரை இலங்கை போர்க் குற்றங்களுக்காக இலங்கை விசாரணை நடத்த
ஒப்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
‘ஜெனிவாவில் மேலும் திருமதி நிமால்கா பெர்னாண்டோ அம்பிகா சற்குணநாதன்
மிகவும் இணைந்து அனைவரும் போர்க் குற்றங்களுக்கான உள்ளூர் விசாரணையை
ஊக்குவித்தனர்’ என்றனர்.
இலங்கையில் உள்ள எந்தவோர் அமைப்பையும் தாங்கள் நம்பவில்லை எனத்
தெரிவித்த அவர்கள், ஏனென்றால் இந்த பரிந்துரைகள் அனைத்தும் அரசியல்
மற்றும் அவர்களின் செயற்பாடுகள் இலங்கை போர்க் குற்றவாளிகளைக்
காப்பாற்றுவதாகும் எனவும் கூறினர்.
Discussion about this post