எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் நிலையில், எரிவரும் நாள்களில் பல பேக்கரிகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
பேக்கரி உற்பத்திக்குத் தேவையான கோதுமை மா, முட்டை, பாம் எண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் மட்டுப்பாடு, மின்வெட்டு என்பன பேக்கரி உற்பத்திகளை வெகுவாகப் பாதித்துள்ளன என்று தெரிவித்த அவர், பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலைகளை அதிகரிக்க நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post