இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) யாரை ஆதரிப்பது என நாளை தீர்மானிக்கவுள்ளது.
நாளை (04) கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம், அதன் தலைமையகமான தாருசலாமில் கட்சித் தலைவர் ரவுஃப் ஹக்கீம் (Rauff Hakeem) தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது யாருக்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு
தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) நூறுக்கு மேற்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post