முல்லைத்தீவு முள்ளியவளையில் உள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் உள்ள பெண் சிறார்கள் மீது பொறுப்பு வாய்ந்த நிர்வாகிகளும், பணியாளர்களும் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அழுத்தங்கள் மற்றும் துஷ்பிரயோக முயற்சி என்பவற்றால் விரக்தியடைந்த 8 பெண்கள் அரளி விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் நேற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.
அநாதரவான இந்தச் சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைத் தடுக்க உரிய தரப்பினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான இல்லங்களை நடத்துபவர்கள் அரசியல் பின்புலத்தைக் கொண்டு, அதிகாரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகள் ஏன் அரளி விதைகளை உட்கொண்டனர் என்பது தொடர்பாகவும், அவர்கள் ஏன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post