முல்லைத்தீவு, குமுளமுனையில் உள்ள குருந்தூர் மலையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலத்தை அழித்து புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்று புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அந்தப் பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தப் பகுதியில் தமிழ் மக்கள் காலம் காலமாக ஆதிலிங்கேஸ்வரர் வழிபாட்டில் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழ் மக்கள் வழிபாட்டுத் தலம் அழிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்குச் செல்லவும் தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அல்லது ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டும் காணாத போக்கிலேயே செயற்படுகின்றனர்.
Discussion about this post