முல்லைத்தீவு செம்மலைக் கடலில் நேற்று நீராடிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அளம்பிலைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே காணாமல் போயுள்ளனர். அளம்பிலைச் சேர்ந்த 9 பேர் கடலில் நீராடச் சென்றபோதே இந்த அனர்த்தம் நடந்துள்ளது.
இது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
Discussion about this post