முல்லைத்தீவு, மூங்கிலாறைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில், தற்போது சிறுமியைப் பற்றிய அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூங்கிலாற்றைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார். அவர் தன்னைத் தேட வேண்டாம் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துச் சென்றிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.
இது தொடர்பாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தற்போது அந்தச் சிறுமி ஹட்டனுக்குச் சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிக்டொக் செயலி ஊடாக அறிமுகமான இளைஞருடன் காதல் வயப்பட்டு 12 வயதுச் சிறுமி சென்றுள்ளார் என்ற அதிர்ச்சியான தகவலும் கூடவே வெளிவந்திருக்கின்றது.
12 வயதேயான சிறுமி காதல் வயப்பட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்கும் சந்தர்ப்பதில் அவற்றைக் கண்காணிக்கத் தவறுகின்மையே இவ்வாறான சம்பவங்களுக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
Discussion about this post