Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

முல்லைத்தீவில் இளவயது மரணங்கள் அதிகரிப்பு!

February 13, 2024
in இலங்கை
முல்லைத்தீவில் இளவயது மரணங்கள் அதிகரிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தில் சில நாட்களாக இளவயது மரணங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் 12.02.2024 நேற்று பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத உயர்தர வகுப்பு மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தற்கொலை செய்துள்ளார்.

இருப்பினும் வீட்டிற்கு வந்த தாய் தந்தையர் மகளை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கவலை
இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை காதல் செய்துவந்த குறித்த யுவதி தனது காதலனுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய காலங்களில் இளவயது மரணங்கள் தற்கொலைகள் தற்கொலை முயற்சிகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு சில தினங்களுக்கு முன்னரும் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு சிறுமி தற்கொலைக்கு முயற்சித்து உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

முன்னைய காலத்தில் கலாச்சாரம் மிக்க சமூகமாக இருந்த தமிழ் சமூகத்தில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்கேட்டு சம்பவங்கள் சிறுவர்களை இளவயதினரை வெகுவாக பாதித்துள்ளது.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல பெற்றோர்கள் சிறுவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக சிறுவர்களின் தொலைபேசி பாவனை என்பது தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

Next Post

கடும் வெப்பநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Next Post
கடும் வெப்பநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடும் வெப்பநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.