நாட்டின் அரசியல் நிலவரங்கள் மற்றும் அரசாங்க விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) மற்றும் பசில் ராஜபக்ச(basil rajapaksa) ஆகியோருக்கு இடையில் வாராந்தம் நடைபெறும் விசேட சந்திப்புகளுக்கு அதிகளவான அரசியல்வாதிகள் வருகை தந்தமையினால் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் இடம்பெற்ற இவ்வாறான சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பலமான உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (prasanna ranatunga)மற்றும் அவரது நண்பர்களான துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake), நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva), மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera), வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) உள்ளிட்ட குழுவுடனேயே அதிபர் ரணில் கலந்துகொண்டுள்ளார்.
பசில்,பிரசன்ன இடையே மோதல்
அது தொடர்பில் பசில் ராஜபக்சவும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், பசில் ராஜபக்சவிற்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
கூட்டணியில் ராஜபக்சக்களை இணைத்துக் கொள்ள வேண்டாம்
இக்கலந்துரையாடலின் போது, எதிர்வரும் அதிபர் தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குமாறும், சிறிலங்கா பொதுஜன பெரமுன அதில் கலந்து கொண்டாலும், ராஜபக்சக்களை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், ஒன்றிணைய விரும்பும் கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க அதிபர் ரணிலிடம் தெரிவித்துள்ளார்.
அந்த கருத்தால் கோபமடைந்த பசில் ராஜபக்ச, ராஜபக்சக்கள் இல்லாமல் இவ்வாறு ஆட்சி செய்ய இடமளிக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
இவ்வாறான கதைகள் அதிபருடனான நல்லுறவை சேதப்படுத்துவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post