முன்னாள் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே வீட்டின் முன்பாகப் பெரும் பதற்ற நிலைமை தோன்றியுள்ளது.
பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாகப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அமைச்சரின் படத்துடன் கூடிய பதாகை ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையானோர் கூடியுள்ளதால் பதற்ற நிலைமை காணப்படுகின்றது. பெரும் எண்ணிக்கையான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post