ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் சேர்ந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை
கட்சியில் இருந்துஅகற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவில் சேர வேண்டாம் என இரண்டு வருடங்களாக விடுத்த கோரிக்கைக்கு
மைத்திரிபால சிறிசேன மதிக்கக்வில்லை எனவும் அதனை வலியுறுத்தியதால்
கட்சியின் அரசியல் குழு மற்றும் ஏற்பாட்டுக் குழுவில் இருந்து அவர்
அகற்றப்பட்டதாகவும் குமாரதுங்க கூறியுள்ளார்
Discussion about this post