முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதே போன்று நீடிக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு முன்பாக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் படுவதால் நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களது வீடுகளுக்கு அருகில் கலவரம் ஏற்படும் பட்சத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையையும், தேவைப்பட்டால் ஆயுதப் படையினரையும் பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post