சீனாவின் முதலீட்டிலான போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரம் இன்னும் முதலீட்டை ஈர்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பொறுத்தவரையில் பூஜ்ஜிய நிலையே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகங்கள் மற்றும் முயற்சிகளுக்கு வழங்கப்படவேண்டிய சட்டப்பூர்வ சலுகைகள் மற்றும் விலக்குகளை அரசாங்கம் இன்னும் வர்த்தமானியில் வெளியிடாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் கடைசியாக பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஎல்சி நிறுவனம், 2021ஆம் ஆண்டு டிசம்பரில், நிலம் ஒன்றின் 99 வருட குத்தகைக்காக 114 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 86 மில்லியன் அமெரிக்க டொலர்களை வளர்ச்சிக்காக செலவிடுவதாக நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இந்த திட்டங்களில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை.குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தைப்படுத்தக்கூடிய சலுகைகள் மற்றும் விலக்குகள் இல்லாததால் இந்த நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post