கொழும்பு துறைமுக நகரில் முதலீட்டு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 74 காணி துண்டுகளில் எந்த காணியை இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொள்வனவு செய்யவில்லை என தெரியவருகிறது.
அதில் 6 காணிகளை உள்நாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்று கொள்வனவு செய்துள்ள போதிலும் அந்த நிறுவனம் இதுவரை நிர்மாணிப்பு பணிகள் எதனையும் ஆரம்பிக்கவில்லை.
இலங்கையில் காணப்படும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அரசியல் அழுத்தங்கள் என்பன இதற்கு பிரதான காரணம் என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையால் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் பணிகள் நிறைவடைந்து, அது சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து வைக்க மேலும் பல காலம் செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post