இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால வீசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது என்றும், இந்த யோசனை ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இலங்கையில் முதலீடு செய்யவும், வேலை செய்யவும் மற்றும் வாழவும் இந்த நடவடிக்கை ஊக்குவிக்கும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post