கம்சாயினி குணரட்ணம் (கம்ஸி) அப்பெருமைக்கு உரியவராகி தமிழர்களால் பாராட்டப்பட வேண்டிய ஒருவராகியுள்ளார் . இவர் மூன்று வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக சென்று , பின்னர் தமிழ் இளையோர் அமைப்பில் இணைந்து அரசியலுக்கு வந்தவர். தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர் அதன் தலைவியாகவும் பதவி வகித்தவர். 19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகரசபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான அவர், 2015முதல் ஒஸ்லோ மாநகரசபையின் துணை முதல்வராகப் பதவி வகிக்கிறார்.நோர்வேயின் மிகப்பெரிய கட்சியான தொழிற்கட்சி, தலைநகர் ஒஸ்லோவில் நிறுத்திய வேட்பாளர்களில், பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யூனாஸ் கார் ஸ்டூரவுக்கு அடுத்த இடத்தில் கம்சியை நிறுத்தியதன் மூலம் அவரது நாடாளுமன்றப் பதவியை உறுதி செய்திருக்கிறது. முழுநேர அரசியல்வாதியாக நோர்வேத் தமிழரிடை இருந்து உருவாகியவர் கம்சாயினி குணரட்ணம் மாத்திரமே எனலாம். கம்ஸியின் இந்த வெற்றி இரண்டு விடயங்களைத் தமிழர்களுக்குச் சொல்கிறது.ஒன்று, சிபாரிசுகள் குறுக்குவழிகளைத் தவிர்த்து உழைப்புக்கு மரியாதை செலுத்தப்படும் என்பது உலகிற் சில இடங்களிலாவது சாத்தியமே என்பது. கம்சாயினியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் உழைப்புமே அவரை இத்தனை உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.இரண்டாவது, ஒருவர் பிறப்பால் வேற்று நாட்டவராய் இருந்தாலும் தான் வாழும் இடத்தின் பிரசையாக இருப்பதால் அவ்விடத்தின் அரசியற் தீர்மானங்களை மேற்கொள்ள அவருக்கு இருக்கும் உரிமை பற்றியது. ம்சாயினியின் வெற்றியை அனைத்து தமிழர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது .
Discussion about this post