இறக்குமதி மூலம் சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை அந்த தொகைக்கு சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே முட்டை உற்பத்தியாளர்கள் தாய் கோழிகளை முட்டை உற்பத்திக்காக பயன்படுத்தாது இறைச்சிக்காக விற்பனை செய்யும் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக முட்டைக்கான தட்டுப்பாடு வலுவடையக்கூடும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்காலத்தில் மேலும் ஒரு தொகுதி முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அரச வணிக பல்சார் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.இதன்படி 10 மில்லியன் முட்டைக்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடு குறைவடையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post