குறைந்தளவு பொது அறிவு மட்டம் கொண்ட ஒருவரால் இத்தகைய நெருக்கடியான பொருளாதார நிலைமையை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும் என்று முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர், ‘கபுதாஸ் விமானத்தை தாக்கினார்’ என்று தெரிவித்த கருத்துத் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்தபோதே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது சிரிக்க வேண்டிய விடயம் அல்ல. அழ வேண்டிய ஒன்று என்று தெரிவித்த உதய கம்மன்பில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக செல்லும் பெண்களும், நீர்கொழும்பில் உள்ள இளைஞர்கள் படகில் இத்தாலி செல்லும் இளைஞர்களும் அந்த நாடுகளின் மொழியில் விரைவில் தேர்ச்சி பெறுகின்றனர்.
நல்ல பொது அறிவு மட்டத்தைக் கொண்ட ஒருவரால் ஒரு மொழியை விரைவாகக் கற்றுக்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
ஆனால் 17 வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்த பஸில் ராஜபக்ச, அமெரிக்க மொழியின் பொது இலக்கணத்தை கையாள முடியாது இருக்கின்றார் என்று கூறிய கம்மன்பில, அது அவரது பொது அறிவு மட்டம் மிகவும் ஆரம்ப நிலையில் இருப்பதையே வெளிப்படுத்துகின்றது என்று கூறினார்.
இவ்வளவு குறைந்த அறிவுத்திறன் கொண்ட ஒருவரால் இத்தகைய நெருக்கடியான பொருளாதார நிலையை எப்படி புரிந்து கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய முட்டாள்தனமான மனிதனால் எவ்வாறு பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post