சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என உள்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை மாற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மகிந்தவிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கைஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் தனி வேட்பாளர் நியமிக்கப்படுவார் என பொதுஜன பெரமுன அறிவித்துள்ள நிலையில் அந்த கட்சி இரண்டு பட்டு போயுள்ளது.குறிப்பாக ரணில் தரப்பு, பெரமுனவின் 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கவில்லை எனவும் அதில் அரைவாசி பேர் மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post