Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

முடங்கும் இலங்கை! – இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறைகள்!!

June 28, 2022
in இலங்கை
முடங்கும் இலங்கை! – இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறைகள்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கு தேவையான எரிபொருள் மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கம் என பெயரிடப்பட்டுள்ள அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (07) மாலை நடைபெற்றது.

இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர், அவசர ஊடக சந்திப்பொன்று இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர்.

” இன்று நள்ளிரவு முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை நாட்டில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும். துறைமுகம், சுகாதாரம், உணவு விநியோகத்துக்கான போக்குவரத்து, விவசாய நடவடிக்கைக்கான தேவைப்பாடுகள், சுற்றுலாத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஊடாக டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்படும்.” – என்று அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

அத்துடன், ஏனையோர் வீடுகளில் இருந்து பணிகளை முன்னெடுக்கலாம் எனவும், அத்தியாவசிய சேவைகள் முடங்காமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல கிராமியபுற பாடசாலைகள் இயங்கும், ஏனையவை 10 ஆம் திகதிவரை மூடப்படும்.

உள்ளக போக்குவரத்து இடம்பெற்றாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் உள்ளக போக்குவரத்துக்கான எரிபொருள் இ.போ.ச. ஊடாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜுலை 10 ஆம் திகதிக்கு பிறகு எரிபொருள் மற்றும் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.

இது லொக்டவுன் அல்ல. 10 ஆம் திகதிவரை வீடுகளில் இருந்து பணிகளை முன்னெடுக்கலாம். கடைகள், பாமசிகள் திறந்திருக்கும். ஜுலை 10 ஆம் திகதிக்கு பிறகு நாடு வழமைபோல இயங்கும் என்று அமைச்சர் ஹரின் குறிப்பிட்டார்.

Tags: அமுல்இலங்கைஎரிபொருள் விநியோகம்கோட்டாபய ராஜபக்சபுதிய நடைமுறைஜனாதிபதி
Previous Post

எரிபொருள் தட்டுப்பாட்டால் நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்குலைவு!!- சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டு!!

Next Post

இன்றைய ராசிபலன்-30. 06.2022

Next Post
இன்றைய ராசிபலன்- 18.06.2022

இன்றைய ராசிபலன்-30. 06.2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.