அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும் உடன்பாட்டை எட்டத் தவறினால் அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இடைக்கால மசோதாவை ஆதரிக்கின்றனர். எனினும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் அதை எதிர்க்கின்றனர்.
இந்நிலையில் மக்களவை நாயகர் கெவின் மெக்கார்தி (Kevin McCarthy) மசோதாமீது வாக்கெடுப்பு நடத்தத் தயாராகிறார். எனினும் அவருடைய சொந்தக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில் அவருக்குச் சிரமம் நீடிக்கிறது.
அதேவேளை மெக்கார்தியைத் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றுவோம் என்று அவருடைய குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும் உடன்பாட்டை எட்டத் தவறினால் அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
Discussion about this post