இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தீவிரடைந்துள்ள நிலையில், நாடு ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் நாளை ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது என்று அறிவித்துள்ள நிலையில், சுகாதாரத் துறையின் சேவைகளும் முடங்கும் நிலையை அடைந்துள்ளன.
காலி, கராம்பிட்டிய போதனா வைத்தியசாலை உட்படக் காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும், சுகாதார நிறுவனங்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினர் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமையே இதற்குக் காரணம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கராப்பிட்டிய கிளை தெரிவித்தது.
அதேநேரம், எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதால் சத்திர சிகிச்சை உட்பட அவசர சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் செல்ல முடியாதுள்ளது என்று இலங்கை மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் தனியர் பஸ் சேவைகளும் நாளை முதல் மட்டுப்படுத்தப்படும் அல்லது நிறுத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. டீசல் வழங்கப்படாமையால் பஸ் சேவைகளைத் தொடர்ந்து நடத்துவது இயலாத காரியம் என்று அவை தெரிவித்துள்ளன.
இலங்கையில் விமான எரிபொருள் விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
கையிருப்புகளை அவசரமாக நிரப்பாவிட்டால், நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் கணிசமான அளவு குறையும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Discussion about this post