Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home மருத்துவம்

முக கருமை நீங்க எளிய வழிமுறை

June 19, 2023
in மருத்துவம், முக்கியச் செய்திகள்
முக கருமை நீங்க எளிய வழிமுறை
0
SHARES
Share on FacebookShare on Twitter

முகமானது பொலிவுடன் இருக்க முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கண்களை சுற்றி இருக்கும் கருவளையம், உதட்டை சுற்றி இருக்கும் கருமை, கழுத்தை சுற்றி இருக்கக்கூடிய கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை எளிதாக அகற்ற வேண்டும்.

இதோ இதற்கான இயற்கை முறையிலான தீர்வு.

நம்முடைய சருமமானது மிகவும் சென்சிடிவ் ஆன தன்மை கொண்டது.

நம்முடைய முகம் முழுவதும், கண்களுக்கு தெரியாமல் சிறு சிறு துவாரங்கள் வழியே தூசுகள், மாசுகள் போன்றவை சென்று பருக்களையும், கருந்திட்டுக்களையும் உருவாக்குகிறது.

இதற்கு முகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதோடு, தினமும் மூன்று முறையாவது முகத்தை வெறும் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும்.

உளுந்து பேஸ்ட்

முக கருமை நீங்க எளிய வழிமுறை - உழுந்து பேஸ்ட் | Natural Ways Get Fair Skin Muga Karumai Neenga

ஒரு டீஸ்பூன் அளவிற்கு முழு வெள்ளை உழுந்தை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் தேவையான அளவிற்கு பால் சேர்த்து ஊற வையுங்கள்.

காய்ச்சிய அல்லது காய்ச்சாத பால் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை

முக கருமை நீங்க எளிய வழிமுறை - உழுந்து பேஸ்ட் | Natural Ways Get Fair Skin Muga Karumai Neenga

அரைத்து எடுத்து இந்த விழுதினை முகம், கழுத்து மற்றும் கருமை இருக்கும் கை, கால் போன்ற பகுதிகளிலும் நீங்கள் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

பத்து நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் பாலை தொட்டுக் கொள்ளுங்கள்.

மசாஜ் செய்த பிறகு அதை அப்படியே உலர விட்டு விடுங்கள்.

நன்கு உலர்ந்து முகம் இறுக ஆரம்பிக்க வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் முகத்திற்கு மென்மையாக மீண்டும் மசாஜ் செய்து முகத்தில் பூசிய இந்த கலவையை ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

பின்பு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

விளைவுகள்

முக கருமை நீங்க எளிய வழிமுறை - உழுந்து பேஸ்ட் | Natural Ways Get Fair Skin Muga Karumai Neenga

குறிப்பாக கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மறைய இது போல மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

அதே போல உதட்டை சுற்றி இருக்கும் கருமை, கரும்புள்ளிகள் நீங்கவும் இது போல மென்மையாக விரலால் மசாஜ் செய்யலாம்.

கழுத்தை சுற்றி இருக்கும் கருமையை இது போல மசாஜ் செய்து வருவதன் மூலம் எளிதாக விரட்டி அடிக்க முடியும்.

பாலுடன் சேர்ந்த உளுந்தில் ஏராளமான நன்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

இவை முகத்தில் இருக்கக் கூடிய கருமைக்கு எதிராக செயல்பட்டு முகத்தை மென்மையாகவும், இறுக்கத்துடனும், வெண்மையாகவும் மாற்றுவதற்கு உதவும்.

இந்த கலவையை ஸ்டோர் செய்து வைக்கக்கூடாது.

அவ்வப்பொழுது தேவைப்படும் சமயத்தில் பிரெஷ் ஆக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்தையும் நீங்கள் இது போல பயன்படுத்தலாம்.

உழுத்தம் மாவையும் நீங்கள் பாலில் ஊற வைத்து இது போல செய்யலாம்.

அதற்கு முதலில் உழுந்தை லேசாக ஒரு வாணலியில் வறுத்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது சுலபமாக பேக் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.

Tags: #Fair#Natural#Skin#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இலங்கையில் மீண்டும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Next Post

இன்றைய ராசிபலன்கள் 20-06-2023

Next Post

இன்றைய ராசிபலன்கள் 20-06-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.