பிரேசில் நாட்டில் கொடிய விஷம் கொண்ட மீனை சாப்பிட்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஷமாகிய மீன்
பொதுவாக கடலில் காணப்படும் மீன் வகைகளை மக்கள் சாப்பிடுவதற்கு அதிகமாகவே விரும்புவார்கள். கடல் வகை உணவுகளை சாப்பிடுவதற்கு அசைவ பிரியர்கள் அதிகமாகவே காணப்படுகின்றனர்.
ஆனால் இவ்வாறு அதிக சத்துக்களைக் கொண்ட கடல் உணவுகள் விஷமாக மாறுமா என்றால் பலரும் ஆச்சரியமாகவே பார்ப்பார்கள்.
இந்த மீன் வகைகளில் ஒரு சில மீன்கள் விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது. அவ்வாறு சாப்பிடக்கூடாத சில வகையான மீன்களை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு பிரேசில் நாட்டில், விஷமுள்ள மீன் என்று தெரிந்தும் அதை சாப்பிட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் நண்பர் ஒருவர் அளித்த கொடிய விஷமுள்ள வகையைச் சேர்ந்த மீனை சமைத்துச் சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் என்ற நபர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் சாப்பிட்ட மீனானது சையனைவிட 1200 மடங்கு விஷம் கொண்டது என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post