நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.
இவர் கைவசம் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
நயன்தாரா – மம்மூட்டி
இந்த நிலையில், நயன்தாராவின் புதிய படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 72 வயதிலும் இளம் ஹீரோ போல் மலையாளத்தில் கலக்கிக்கொண்டு இருப்பவர் மம்மூட்டி. இவருடன் நயன்தாரா இதற்கு முன் மலையாளத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் மம்மூட்டி உடன் இணைந்து நடிக்கவுள்ளாராம் நயன். இப்படத்தை தமிழ் சினிமாவில் ரொமான்டிக் படங்களுக்கு பேர்போன இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்கவுள்ளாராம்.
இதுவரை கவுதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா நடித்ததே இல்லை. இப்படம் உறுதி செய்யப்பட்டால் இதுவே கவுதம் மேனன் உடன் நயன்தாரா இணையும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post