கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை கோதுமை மா விநியோக நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிததது.
அண்மையில் கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கோதுமை மா ஒரு கிலோ 180 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக கோதுமை மா மீண்டும் 50 ரூபாவால் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.
கோதுமை மா விலையேற்றத்தால் வெதுப்பக உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மீண்டும் விலையேற்றம் ஏற்பட்டால் வெதுப்பக உரிமையாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
Discussion about this post