இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ரணில் விக்கிரமங்கவுக்கும் இடையே நேற்று இரவு நடந்த அவசர சந்திப்பில் இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன என்று உள்ளகத் தகவல்கள் தெரிவித்தன.
புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.
ஆயினும் சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தனர்.
இந்தநிலையில் ஜனாதிபதிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நேற்றிரவு அவசர சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாகவும், பிரதமராக ரணில் பதவியேற்பது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
எதிர்வரும் நாள்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நகர்வுகள் தொடர்பான ஆலோசனைகளையும் ஜனாதிபதி, ரணிலிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிகின்றது.
Discussion about this post