சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு எண்ணெய்யைப் பயன்படுத்தி இதுவரை சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தப்பட்டது.
ஆயினும் தற்போது மூன்றாவது கப்பல் இலங்கைக்கு வந்துள்ள போதும், அதற்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக மசகு எண்ணெய்யைத் தரையிறக்க முடியவில்லை.
அதனால் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடந்தும் செயற்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். சுத்திகரிப்பு நிலையம் இயங்காது விட்டால் நாட்டில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post