இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு கோரிக்கையும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை 56 வீதத்தால் அதிகரிப்பதற்கு சிறிலங்கா மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் “இலங்கையில் 56 வீதத்தால் மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க சிறிலங்கா மின்சார சபை திட்டமிட்டுள்ளதாக மின் பாவனையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இதுவரை சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு எந்தவொரு கோரிக்கையும் கிடைக்கப் பெறவில்லை, மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமாயின் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற வேண்டும்.
அத்துடன் ஒரு வருடத்துக்கு இரு தடவைகள் மாத்திரம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க முடியும்” என்றார்.
Discussion about this post