சம்பள முரண்பாடுகள் தொடர்பான தங்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முன்னகர்வுகளையும் மேற்கொள்ளாத நிலையில் இன்று முதல் இரு நாள்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்று சுகாதார தொழிற்சங்கச் சம்மேளனம் தெரிவித்தது.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தாதிய உத்தியோகத்தர்களும் ஆதரவு வழங்கவுள்ளனர்.
பணிப்புறக்கணிப்புக் காலத்தில் அவசர மற்றும் உயிர்காக்கும் சேவைகளில் மட்டுமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாள்கள் தாதியர் உட்பட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.
Discussion about this post