இலங்கையில் எரிவாயு விநியோகிக்கும் நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளன.
போதியளவு எரிவாயு கையிருப்பில் இல்லாமையால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று எரிவாயு விநியோக நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் தெரிவித்தன.
வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிவாயு கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காகக் காத்திருக்கின்றனர்.
சில நாள்களுக்கு முன்னரும் சமையல் எரிவாயு விநியோகத்தை இந்த நிறுவனங்கள் நிறுத்தியிருந்தன. எரிவாயு கொள்கலன் கப்பல்களுக்கு கட்டணத்தைச் செலுத்த இலங்கை அரசாங்கத்திடம் டொலர் இல்லாமையே இந்த நிலைமைக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Discussion about this post