பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இலக்கு மக்களுக்கு மூன்றுவேளை உணவு கொடுப்பதும், எரிபொருள் பெற்றுக்கொடுப்பதும் தான். நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சிந்தனை ரணில் விக்கிரமசிங்கவிடம் இல்லாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவருக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாகக் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று கிளிநொச்சியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கவனம் செலுத்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களைக் கூறித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முயலக்கூடும் என்று தெரிவித்த அவர், அது தொடர்பில் கூட்டமைப்பு அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சூடு கண்ட பூனையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மீண்டும் அதைப் போன்று செயற்படக்கூடாது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post