மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு உயர்வு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் முன்னர் கடைபிடித்த சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீளவும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகக்கவசம் அணிதல், ஒரு மீற்றர் இடைவெளியை கடைபிடித்தல், தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் கூட்டம் கூடுவதைக் குறைத்தல் போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
தற்போது, பரவுவது கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபுடன் தொடர்புடைய உப பிறழ்வாகும். இந்தத் திரிபு வேகமாகப் பரவுகின்றது. ஆயினும் இலங்கையின் தற்போதைய நிலைமை கட்டுப்படுத்தக்கூடிய மட்டத்தில் உள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கையிலும் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை மற்றொரு கொரோனா அலையாக மாற்றாது கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post