லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பாகத் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.
சிலிண்டர் ஒன்றின் விலையை 5 ஆயிரத்து 100 ரூபா அல்லது அதனை அண்மித்த தொகையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை லிட்ரோ 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாகக் காணப்படுகின்றது.
Discussion about this post