மியான்மாரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் புலம் பெயர்ந்த முகாமில் தங்கியிருந்த 11 குழந்தைகள் உட்பட சுமார் 29 பேர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கச்சின் சுதந்திர அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம் ஒன்றின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது .
தீவிர சிகிச்சை பிரிவில்
மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்
மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.
அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தவர்கள் என கசின் குழு தெரிவித்துள்ளது.
கடந்த 63 ஆண்டுகளாக கச்சின் மாநிலத்தில் மோதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டுகளில் இருந்து கச்சின் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆயுதப் படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் 2021 ல் வெளியேறியதையடுத்து மியன்மாரின் பெரும்பகுதி பரந்த உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த தாக்குதலுக்கு நாடுகடத்தப்பட்ட தேசிய ஒற்றுமை அரசாங்கம், இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள நிலையில் இராணுவ ஆட்சி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் சாவ் மின் துன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
Discussion about this post