மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சிக்கு எதிரானவர்கள் மீது இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் சுமார் 100 பேர் உயிரிழந்ததற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆசிய நாடான மியான்மரில் 2021ம் ஆண்டு முதல் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இராணுவத்திற்கான எதிரான அமைப்பினர் சகாயிங் பிராந்தியத்தில் உள்ள பா ஷி ஜியீ கிராமத்தில் அலுவலகம் திறப்பதாகவும், அங்கு ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போர் விமானங்கள் மூலமாக அந்த கட்டடத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், மேலும் 30 பேர் காயமடைந்தனர். தங்களின் வான்வழித் தாக்குதல் கண்ணிவெடிகளுக்கான சேமிப்புப் பகுதியையும் தாக்கியதால் அப்பகுதியில் கூடுதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
Discussion about this post