தடையின்றி மின்சார விநியோகத்தை வழங்கும் வரையில் உத்தேச மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுது்தப்பட்டள்ளது.
தற்போது ஒரு மின் அலகு உற்பத்திக்கு 40 ரூபா செலவிடப்படுகிறது. எனினும், ஒரு மின் அலகுக்கு 8 ரூபாவுக்கும் குறைவான கட்டணமே அறிவிடப்படுகிறது. இந்தநிலையில் தொடர்ந்தும் விநியோகத்தை முன்னெடுத்து செல்வதற்கு உற்பத்தி செலவினங்களுக்கு ஏற்றவகையில் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டது.
அமைச்சரவையால் மின்சார சபையிடம் இருந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கோரப்பட்டிருந்தது. இந்த யோசனை தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நீர்வழங்கல் அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post