கடந்த சில மாதங்களை விட மின்தேவை அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்று (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பேச்சாளரான பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த பெப்ரவரி மாதத்தில் கடந்த சில நாட்களாக 46 கிகாவோட் மணித்தியால மின்சார தேவை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்காரணமாக மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது முடிந்தவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த மேலும் தெரிவித்தார்.
Discussion about this post