இலங்கையில் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் மின்வெட்டு நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத இறுதிக்குள் போக்குவரத்து நெருக்கடிகள் தீரும் ஏற்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரயில் மற்றும் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபத்திடம் இருந்து நீக்கி, போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்கும் யோசனை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்கள் ஊடுாக எரிபொருள் வழங்குவற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் அல்லது ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Discussion about this post