மின் மயானம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உருவாக்குவது சம்மந்தமான ஆரம்ப கட்டக் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (18) சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது .நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்து கொண்டு மின் மயானம் அமைப்பது சம்மந்தமான ஆரம்ப கட்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலின் போதுசகல தரப்பினரையும் அழைத்து மயான அபிவிருத்திக் குழு ஒன்றினை முதலாவதாக நிறுவி குறித்த குழு ஊடாக மின் மயான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனத் முடிவெடுக்கப்பட்டது.
இவ் வகையில் வரும் 22ஆம் திகதி பிற்பகல் 3மணிக்கு நகரசபையில் இம் மயான அபிவிருத்திக் குழுத் தெரிவு இடம்பெற இருப்பதால் ஆர்வமுள்ளோரை குறித்த சந்திப்பில் பங்க்குபெற்றுமாறு கேட்டுள்ளனர் .
Discussion about this post