இலங்கை மின்சார சபைத் தலைவருக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக தெரிவித்த பொய் கருத்துக்கு எதிராகவே வழக்கு தொடரப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த வாரம் நடைபெற்ற கோப் குழு விசாரணை இடம்பெற்றுள்ளது.
வடக்கின் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கான அனுமதியை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்தார் என்று ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்தார் என்று பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
பின்னர் தான் அவ்வாறு கூறியது தவறு, களைப்பு மற்றும் மனஅழுத்தம் காரணமாக தான் அவ்வாறான பொய்த் தகவல் ஒன்றை கூறினேன் என்று அவர கூறியுள்ளார்.
எனினும் நாடாளுமன்ற குழுவொன்றின் முன்னால் பொய் உரைப்பது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் பெரும் குற்றச் செயலாகும். மின்சார சபைத் தலைவர் பெர்னாண்டோவுக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
மின்சார சபைத் தலைவர் யாரோ ஒருவருடைய அழுத்தங்களுக்கு அடிபணிந்தே தனது முன்னைய கருத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளார் என்றார்.
Discussion about this post